வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் 200 ஆவது ஆண்டினை முன்னிட்டு சைக்கிள் பவணி!

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் 200ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு கல்லூரியின்  200ஆவது    முன்னிட்ட நிகழ்வின்  ஒரு பாகமாக வட்டுகோட்டை யாழ்ப்பாண கல்லூரியினரால் விசேட   துவிச்சக்கர வண்டி பவனி ஒன்று இன்று இடம்பெற்றது.

இன்று காலை 7:00 மணியளவில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் யாழ். போதனா வைத்தியசாலையின்  முன்பாக அமைந்துள்ள  யாழ்ப்பாணகல்லூரி  உயர்பட்டபடிப்புக்கள் பிரிவில் கல்லூரியின் அதிபர் ருஷிரா குலசிங்கம் தலைமையில் குறித்த நிகழ்வு ஆரம்பமானது.

மத வழிபாடுகளோடு ஆரம்பமான நிகழ்வில் 200 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு 200 மரக்கன்றுகளை நாட்டும் செயற்திட்டத்தின் ஒரு அங்கமாக மூன்று மரக்கன்றுகள் யாழ்ப்பாணக் கல்லூரியின் உயர் பட்டபடிப்புக்கள் வளாகத்தில் நாட்டிவைக்கப்பட்டது.

தொடர்ச்சியாக கல்லூரியின்   கொடிகளை தாங்கயவண்ணம் கல்லூரியின் ஆண் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தமது சைக்கிள் பவணியை ஆரம்பித்து கே.கே.எஸ் வீதியினூடாக கல்லூரியின் சகோதரத்துவ பாடசாலையான உடுவில் மகளீர் பாடசாலையை வந்தடைந்து தொடர்ச்சியாக கல்லூரியின் பெண் மாணவர்களையும் இணைத்து கொண்டு மானிப்பாய் கிறீன் ஞாபகார்த்த வைத்தியசாலையை அடைந்து பின்னர் சண்டிலிப்பாய் சங்கானை சித்தன்கேணியினூடாக வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியினை சென்றடைந்தது.

இதன்பொழுது கல்லூரியின் அதிபர் ருஷிரா குலசிங்கம்,கல்லூரியின் பிரதி அதிபர் ஏ.சி.பிரான்சிஸ்,கல்லூரியின் உப அதிபர் கிளாடிஸ் முத்துராஜ்,உடுவில் மகளீர் கல்லூரியின் அதிபர் மதுரமதி  குலேந்திரன்,பாடசாலை ஆசிரியர்கள்,மாணவர்கள்,பழைய மாணவர்கள் பெற்றொர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *