மட்டக்களப்பு, சுவிஸ்கிராமம் திராய்மடு பகுதிக்கு செல்லும் வீதியை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த பிரதேசத்துக்கு செல்லும் வீதியை மூடுவதற்காக சில பணியாளர்கள் அங்கு சென்றிருந்த நிலையில், பொதுமக்கள் இதுதொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதன்போது, அதிகாரிகளின் பணிப்புக்கு அமைய இந்த வீதி மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸாரும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளதுடன், ரயில் பாதையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பதற்றம் நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த வீதி மூடப்பட்டால் அவச வைத்திய தேவைகளுக்கு செல்லும்போது அதிக தூரம் பயணிக்கவேண்டியுள்ளதுடன், மரணங்களும் சம்பவிப்பதற்கு சந்தர்ப்பம் காணப்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.