யாழ் தொழில்நுட்பக் கல்லூரியின் வைரவிழா நிகழ்வானது இன்று (27) காலை 9 மணிக்கு கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ். சிறீ சற்குணராசாவும் சிறப்பு விருந்தினராக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரனும் கலந்து சிறப்பித்தனர்.
தொழில்நுட்பக் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும பழைய மாணவர்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற இந் நிகழ்வில் வைர விழா மலர் வெளியீடும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.










