மயிரிழையில் உயிர்தப்பிய மூவர் – சாரதியின் சாதூர்ய செயல் samugammedia

இன்று (27) காலை வாத்துவ தல்பிட்டிய பிரதேசத்தில் முச்சக்கர வண்டி ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

பெலியத்தவில் இருந்து மருதானை நோக்கி பயணித்த ‘களு குமாரி’ கடுகதி புகையிரதத்தில் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதோடு, சம்பவத்தில் இரு பெண்கள் காயமடைந்துள்ளது.

தல்பிட்டிய சமுர்த்தி வங்கிக்கு சென்றுக்கொண்டிருந்த இருவரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புகையிரத கடவையில் பாதுகாப்பு அமைப்பு இல்லாத நிலையில், அதன் தண்டவாளத்தில் வைத்து முச்சக்கரவண்டி இயந்திரம் செயலிழந்ததாகவும், பின்னர் விரைந்து செயற்பட்ட சாரதி இரண்டு பெண்களையும் முச்சக்கரவண்டியிலிருந்து வெளியேற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply