யாழில் உள்ள வர்த்தக நிலையமொன்றுக்கு தீ வைத்த விசமிகள்! – பொலிஸார் தீவிர விசாரணை samugammedia

நாகர்கோவில் மேற்கில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றிற்கு  இன்று அதிகாலை இனம் தெரியாதோர் தீ வைத்துள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.

நாகர்கோவிலில்  இன்று அதிகாலை 5 மணியளவில் நாகர் கோவிலைச் சேர்ந்த லோகஸ் மரியதாஸ் என்பவருக்குச் சொந்தமான அம்மன் ஆலயத்திற்குஅருகிலுள்ள கடைக்கே இவ்வாறு  யாரோ ஒருவர் தீ வைத்துள்ளதாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தீ விபத்தினால் கடைக்கும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இதனை செய்தவர்கள் தொடர்பில் பொலிசாஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply