'நீங்கள் இனவாதி' சபையில் அமைச்சரை விளாசிய சாணக்கியன் – வடக்கு, கிழக்கு முடங்கும் எனவும் எச்சரிக்கை!samugammedia

புத்தசாசன அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவை ‘நீங்கள் இனவாதி’ என்றும் தொல்பொருள் திணைக்களத்தைவைத்து அவர் நாட்டில் மீண்டும் பிரச்சினையை ஏற்படுத்த முனைவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வில் உரையாற்றிய சாணக்கியன், கடும் தொனியில் அவரை எச்சரித்தார்.

வெடுக்குநாறிமலை, குருந்தூர் மலை உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், தொல்பொருள் திணைக்களத்தின்மூலம் வடக்கு கிழக்கில் காணிகளை சுவீகரிப்பதாகவும் சாணக்கியன் தெரிவித்தார்.

அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் வந்தாலும் இவ்வாறான இனவாத அமைச்சர்கள் இருக்கும்வரை நாட்டில் மாற்றம் ஏற்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் உணவுக்கும் தண்ணீருக்கும் பணம் இல்லாத சூழலில் தொல்பொருள் திணைக்களத்துக்கு நிதி ஒதுக்கப்படுவதாகவும் சாணக்கியன் தெரிவித்தார்.

இவ்வாறான இனவாத செயல்கள் தொடருமானால் ஐ.எம்.எப். உட்பட இந்த நாட்டை எவராலும் காப்பாற்ற முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தாவிட்டால் வடக்கு,கிழக்கை முடக்குவோம் என்றும்  இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.

Leave a Reply