மருந்து தட்டுப்பாடு அதிகரிப்பு: சுகாதார அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு…!samugammedia

எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் மருந்து தட்டுப்பாட்டை முழுமையாக நிவர்த்தி செய்வதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டி – பல்லேகலை பகுதியில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அத்துடன், நியாயமான விலைக்கு மருந்துகளை விற்பனை செய்யும் நடவடிக்கைக்கும் செல்ல வேண்டும் என்றும்  அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மக்களை அசௌகரியத்துக்கு உள்ளாக்கி, அரசியல் நோக்கத்தை நிறைவேற்ற செயற்படும் சில தொழிற்சங்க செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த 90 சதவீதமானோர் ஒத்துழைப்பு வழங்குவதை சமூக ஊடகங்கள் வாயிலாக தாம் பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply