நாட்டில் தக்காளிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை..!samugammedia

ஒரு கிலோகிராம் தக்காளியின் விலை நேற்று (9) முதல் அதிகரித்துள்ளதாக ஹட்டன் பிரதேச மரக்கறி விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நாட்களில் ஏனைய மரக்கறிகளின் விலைகள் கணிசமான அளவில் குறைந்துள்ள நிலையில், கடந்த காலங்களில் 150 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி 250 ரூபாவை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பண்டிகைக் காலங்களில் சந்தையில் அதிக கேள்வி நிலவுகின்றமையால் தக்காளியின் விலை உயர்ந்துள்ளதாக விற்பனையாளர்கள் மேலும் தெரிவித்தனர்.

Leave a Reply