ரணிலுக்கு ஆத்திரமூட்டவேண்டாம் – ரணிலிடம் மண்டியிட்ட மொட்டுக் கட்சியினர்.! samugammedia

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தொடர்ந்து அமைச்சுப் பதவிகளை கோரி அவரை ஆத்திரமூட்டும் செயற்பாட்டினை நிறுத்துவதற்கு பொதுஜன பெரமுன கட்சி தீர்மானித்துள்ளதாக கட்சியின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அமைச்சர் பதவியை கோரி ஜனாதிபதியை ஆத்திரமூட்ட வேண்டாம். ஜனாதிபதி அமைச்சுப் பதவியை வழங்கினாலும், வழங்காவிட்டாலும் கட்சியின் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்படும்.

அமைச்சர் பதவியை வழங்கினால் கொடுங்கள், வழங்காவிட்டாலும் பிரச்சினையில்லை, எமது பணியை தொடர்வோம், எஞ்சியதை தொடர்வதற்காகவே ரணில் விக்கிரமசிங்கவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரித்தது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு மேலும், 10 அமைச்சரவை அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்திருந்த போதிலும் பல்வேறு காரணங்களுக்காக அமைச்சுப் பதவிகளை வழங்காமல் ஜனாதிபதி காலம் தாழ்த்தி வருவதாகவும் பேச்சாளர் குறிப்பிட்டார்.

வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு அமைச்சுப் பதவியை வழங்குவதாக ஜனாதிபதி முதலில் அறிவித்ததாகக் தெரிவித்த பேச்சாளர், எனினும் அதனை ரணில் நடைமுறைப்படுத்தவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் தொகை பெற்றுக் கொண்ட பின்னர், அமைச்சுப் பதவிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதாகவும் ஆனால் அதனையும் ஜனாதிபதி நிறைவேற்றவில்லை என பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளமையின் பின்னணியில் மற்றுமொரு உள்நோக்கம் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply