அம்பாறையில் அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட முக்கிய பொருள்..! ஒருவர் கைது..!samugammedia

அனுமதி பத்திரமின்றி அதிகளவான மதுபான போத்தல்களை சட்டவிரோதமாக கொண்டு சென்று விற்பனை செய்த  சந்தேக நபரை  பெரியநீலாவணை  பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை(7) மாலை  அதிகளவான  பியர் மற்றும்  மதுபான போத்தல்கள்  சட்டவிரோதமாக அனுமதி பத்திரமின்றி விற்பனையில் ஈடுபடுவது  தொடர்பில்  கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய  பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஜீ.துசார திலங்க ஜெயலால் வழிநடத்தலில் பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரியும் உப பொலிஸ் பரிசோதகருமான டி.டினேஸ் தலைமையிலான குற்றத் தடுப்பு பிரிவினர்  சோதனை நடவடிக்கையில்  ஈடுபட்டு சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

இதன் போது   சுமார் 37 வயது மதிக்கத்தக்க  துறைநீலாவணை பகுதியை சேர்ந்த  சந்தேக நபர்  மதுபான போத்தல்கள் மற்றும் பியர் ஒரு தொகுதி ஆகியன சூட்சுமமாக மறைத்து விற்பனையில் ஈடுபட்ட நிலையில் மாறுவேடத்தில் சென்ற பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு கைதான நபர் வசம் இருந்து  மீட்கப்பட்ட மதுபான போத்தல்கள் சுமார் பல இலட்சம் பெறுமதியானவை எனவும் அத்துடன்  அளவிற்கு அதிமான மதுபான போத்தல்களை தம்வசம் வைத்திருந்தமை மற்றும்  உரிய அனுமதி இன்றி சட்டவிரோதமாக பதுக்கி விற்பனை செய்தமை  உள்ளிட்ட  குற்றச்சாட்டில் மேற்படி சந்தேக நபர்  கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 மேலும், கைதான சந்தேக நபர்  தொடர்பில் விசாரணைகளை பெரிய நீலாவணை  பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த  நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply