எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் தொடர்பான உண்மையை மூடி மறைப்பதற்காக, தான் வழங்கிய தகவலை நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச பயன்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியிருந்தார்.
இங்கிலாந்தில் வசிக்கும் சாமர குணசேகர, மேற்கிந்திய தீவுகள் பகாமஸ் இலுள்ள வங்கிக் கணக்கிற்கு 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணத்தைப் பெற்றுள்ளதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்சவிடம் நான் தெரிவித்தேன்.
அதை அவர் இங்கிலாந்திலுள்ள ஒரு வங்கிக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளதாக தவறாக புரிந்து கொண்டுள்ளதாக அஜித் மன்னப்பெரும இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
எக்ஸ்பிரஸ் பேர்ள் விவகாரம் குறித்த உண்மையை மூடி மறைக்க தான் வழங்கிய தகவலை நீதியமைச்சர் பயன்படுத்தியுள்ளார்.
குறித்த பிரச்சினை தொடர்பில் அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக நான் அவரை நம்பி உறுதிப்படுத்தப்படாத தகவலை அவருக்கு வழங்கியிருந்தாக அவர் குறிப்பிட்டார்.
அது உறுதிப்படுத்தப்பட்ட தகவலாக இருந்தால் நான் அதை இரகசியமான முறையில் அவருக்கு வழங்கியிருக்க மாட்டேன். குறித்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்துமாறு கோரி நான் அவருக்கு தகவலை வழங்கினேன்.
அதை செய்யாமல் அவர் ஊடகங்களுக்கு அந்த இரகசிய தகவலை சொல்லி விட்டு மயில் போல் ஆட்டம் போட்டார்.
இப்போது அவர் வெளியிட்ட தகவல் தவறு என தெரிந்தவுடன் தன் மேல் பழி போடுவதாக அஜித் மன்னப்பெரும குற்றம் சுமத்தியுள்ளார்.
வெளியான தகவல் சரியா தவறா என ஒரு மாதம் கழிந்த பின்னும் அவரால் அறிக்கை ஒன்றை வெளியிட முடியவில்லை. அவருடைய அமைச்சு பதவியை ஒரு குழந்தையிடம் ஒப்படைக்கலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.