சிங்கள பேரினவாத அரசின் கைக்கூலியாக செயற்படும் தொல்லியல் திணைக்களம் -விஜயகுமார் காட்டம்!samugammedia

யார் கூறினாலும் கூறாவிடிலும் வடக்கும் கிழக்கும் தமிழர்களுடைய தாயகம் எனவும் தமிழர்களின் பிரதேசங்களை தொடர்ந்தும் திட்டமிட்டு சிங்கள பேரினவாத அரசு அபகரிப்பதாகவும்  யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அழகுராசா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் திருகோணமலையில் இடம்பெற்ற பௌத்த  மயமாக்கலிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

திருகோணமலையில் பௌத்த பேரின வாதத்திற்கு எதிராக போராட்டத்தினை முன்னெடுத்தோம். அதனை கூட செய்ய விடாது புலனாய்வாளர்கள் அச்சுறுத்தியும் காணொளிகளையும் எடுத்தனர்.

அந்த வகையில், திருகோணமலை மண்ணிலே புத்த விகாரைகள் எதற்கு? தமிழர் பகுதிகளில் இராணுவ , CID மற்றும் ஆக்கிரமிப்புக்களும் இடம்பெறுகின்றது. பொதுவாக காணப்படும் மயானத்தை கூட பிச்சை எடுக்கும் வகையில் அபகரித்து வைத்துள்ளனர். அத்தோடு தமிழர்களின் நிலங்களையும் அபகரித்து வைத்துள்ளனர்.

திருமங்களாயில் காட்டு பகுதி என்றும், மலையடி பிள்ளையார் கோயிலில் புத்தவிகாரை கட்டியும் வைத்துள்ளனர். ஆனால் எமக்கு ஆலயங்களை அமைப்பதற்கு எந்த உரிமைகளும் இல்லை.
இவ்வளவும் போதாதென்று தாய்லாந்திலிருந்து புத்த சிலையை கொண்டு வந்து வைக்கவுள்ளனர்.

அத்தோடு இனவழிப்பு நாளான மே 18 கூட விட்டு வைக்காது தமிழ் பிரதேசங்களை ஆக்கிரமிப்பதற்காக கிளிநொச்சியில் உருத்திரபுர சிவன் ஆலயத்தை ஆக்கிரமிப்பதற்காக தொல்லியல் திணைக்களம் அரசின் கைக்கூலியாக அதை அளவிடவுள்ளது. இவ்வாறு திட்டமிட்டு பறித்தால் வடகிழக்கு ரீதியாக பெரும்பான்மையான மாணவர்களையும் , மக்களையும்  இணைத்து போராட்டங்களை மேற்கொள்வோம்.

எமது பகுதியான வடகிழக்கில் எம்மால் சுதந்திரமாக திரிய முடியவில்லை. இந்த சிங்கள பேரினவாத அரசு எம்மை அடக்கி கொண்டுள்ளது. யார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் வடக்கும் கிழக்கும் தமிழர்களின் தாயகம் என்பதுடன் சிங்கள பௌத்தர்களிற்கு எந்தவிதமான இடமும் இல்லை எனவும் தெரிவித்தார்.

Leave a Reply