சஜித்தின் வயிற்றில் புளியை கரைத்துள்ள ராஜித…! ஆட்டம் காணும் ஐக்கிய மக்கள் சக்தி…! samugammedia

அண்மைக்காலமாக அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியான நிலையில் தற்போது அதனை உறுதி செய்யும்படியான நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

அரச தாதியர் சங்கத்தினால் கொழும்பு அறக்கட்டளையில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவும் கலந்துகொண்டார்.

நிகழ்வில் பிரதமர் தினேஷ் குணவர்தன, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன ஆகியோர் கலந்துகொண்டனர்.

ராஜித சேனாரத்ன அரசாங்கத்தில் இணைந்து கொள்வார் என அண்மைக்காலமாக அரசியல் பரபரப்பாக செய்தி பரவிய நிலையில் அரசாங்கத்தின் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளமை ஐக்கிய மக்கள் சக்திக்குள் சலசலப்பை ஏற்படுத்தியள்ளது.

சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு இந்த நிகழ்வுகள் நேற்று கொழும்பில் இடம்பெற்றன.

Leave a Reply