வவுனியாவில், திடீரென தீப்பிடித்த மோட்டார் சைக்கிள்: தெய்வாதீனமாக உயிர் பிழைத்த குடும்பம்! samugammedia

வவுனியா நகர மத்தியில் இன்று (13.05.2023) மாலை 6 மணியளவில் மோட்டார் சைக்கிலொன்று திடீரேன தீப்பற்றிய நிலையில் அதில் பயணித்தவர்கள் எவ்வித பாதிப்புமின்றி உயிர்தப்பியிருந்தனர்.

ஏ9 வீதியுடாக பயணித்துக்கொண்டிருந்த TVS சாம் ரக மோட்டார் சைக்கில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அண்மித்த பகுதியில் திடீரென தீப்பற்றியெறிந்துள்ளது , அதில் பயணித்த கணவன் , மனைவி , பிள்ளைக்கு எவ்வித உயிராபத்தும் ஏற்படவில்லை என்பதுடன் தீப்பற்றிய மோட்டார் சைக்கிள் பொதுமக்களின் மிகுந்த போராட்டத்திற்கு மத்தியில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதுடன் மோட்டார் சைக்கிள்  எரிந்து நாசமாகியுள்ளது.


மோட்டார் சைக்கிளில் ஏற்பட்ட மின் ஒழுக்கினால் இச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

குறித்த அனர்த்தம் தொடர்பில் பொலிஸார் மேலதிக  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார் என தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply