குறுகிய அரசியல் செய்யும் துமிந்த – தலைவருக்கு பறந்த 8 பக்க கடிதங்கள்.! samugammedia

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகரவின் செயற்பாட்டைக் கண்டித்து, கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

கட்சியின் பொதுச் செயலாளருக்கும் கட்சியின் அமைப்பாளருக்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலும் 8 பக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்களை கட்சியின் அரசியல் குழுவிற்கும் மத்திய குழுவிற்கும் அனுப்பி வைக்குமாறு கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகரவும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பலமாக இருக்கும் போதெல்லாம் கட்சியை பலவீனப்படுத்தி கட்சியை பிளவுபடுத்துவதுடன் கட்சியின் வீழ்ச்சியடையச்செய்துள்ளதாக தயாசிறி ஜயசேகர கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மற்றும் வெளிநாட்டு சக்திகளை பலப்படுத்தி அதன் மூலம் தனது குறுகிய தனிப்பட்ட இலாப நோக்கங்களை துமிந்த திஸாநாயக்க அடைவதாக  தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply