பிரான்ஸில் காணாமல்போன இலங்கையின் முப்படையைச் சேர்ந்த ஏழு வீரர்கள்! samugammedia

2023ஆம் ஆண்டுக்கான உலக இராணுவ டிரையத்லான் செம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற இலங்கையின் முப்படையைச் சேர்ந்த ஏழு வீரர்கள் பிரான்சில் காணாமல் போயுள்ளனர்.

அதன்படி, நிகழ்விற்காக பிரான்ஸ் சென்ற 13 பேர் கொண்ட தூதுக்குழுவின் தலைவரிடமிருந்து இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த நான்கு அதிகாரிகள், கடற்படை வீரர் ஒருவர் மற்றும் இலங்கை விமானப்படையின் இரண்டு அதிகாரிகள், தமது கடவுச்சீட்டுகளை திருடி, குழுவிடம் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக நம்பப்படுகிறது.

இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக முப்படையைச் சேர்ந்த ஐந்து ஆண்கள், ஐந்து பெண்கள் மற்றும் மூன்று அதிகாரிகள் அடங்கிய 13 பேர் மே 04 ஆம் திகதி அன்று பிரான்ஸ் சென்றுள்ளனர். 

கடந்த காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததால், போட்டியாளர்களின் கடவுசீட்டுக்கள் மூத்த அதிகாரி ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. எனினும் குறித்த ஏழு பேரும் தமது கடவுச்சீட்டுக்களை திருடிச் சென்றதாக  நம்பப்படுகிறது.

Leave a Reply