பாடசாலை மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து..! கல்வி அமைச்சே பொறுப்புக்கூறவேண்டும்! samugammedia

நாட்டிலுள்ள பல பாடசாலைகளுக்கு அருகில் கழிவுகள் கொட்டப்படுவதால் டெங்கு நுளம்பின் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும் இதற்கு கல்வியமைச்சே பொறுப்பேற்றவேண்டுமென இலங்கை சுதந்திர ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சந்திமால் விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் உள்ள பல பாடசாலைகளில் உரிய துப்பரவு பணியாளர்கள் இன்மையால் பாடசாலை வளாகத்தில் துப்புரவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதற்கு உடனடியாக கல்வியமைச்சு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் இலங்கை சுதந்திர ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை பாடசாலைகளில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு தேவையான செயற்பாடுகளை பாடசாலை மட்டத்தில் நடைமுறைப்படுத்த வேண்டுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஏற்கனவே தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply