களுத்துறை மாணவியின் மர்ம மரணம்..! நண்பியும், காதலனும் இன்று நீதிமன்றுக்கு! samugammedia

களுத்துறையில் ஐந்து மாடி விடுதி கட்டடத்தில் இருந்து விழுந்து 16 வயது பாடசாலை மாணவி உயிரிழந்ததாக கூறப்படும்  சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள அவரது நண்பி மற்றும் நண்பியின் காதலன் ஆகியோர் இன்று (15) மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 29 வயதுடைய பிரதான சந்தேகநபர் களுத்துறை பிரதான நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், உயிரிழந்த மாணவிக்கு இறுதியாக கடைசியாக தொலைபேசி அழைப்பை மேற்கொண்டவர் யார் என்பது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

கடைசியாக தனக்கு வந்த தொலைபேசி அழைப்பினால் பீதியடைந்து சிறுமி ஜன்னல் வழியாக குதித்திருக்கலாம் என பிரதான சந்தேக நபர் வாக்குமூலம் அளித்துள்ளார். 

மாணவிக்கு தொலைபேசி அழைப்பை விடுத்த ஆசிரியர் ஒருவரிடம் வாக்குமூலத்தை பதிவுசெய்ததாக காவல்துறை முன்னதாக தெரிவித்தது.

எவ்வாறாயினும், மாணவியின் நண்பியால் இறுதியாக தொலைபேசி அழைப்பு விடுக்கப்பட்டதாக சில செய்திகள் வெளியாகியிருந்த போதிலும் அதுகுறித்த குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லையென காவல்துறை தகவல் தரப்புகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply