போனால் போகட்டும்..! கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை- சஜித் அணி பதிலடி..!samugammedia

முன்னாள் அமைச்சர் பி. ஹரிசன் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து வெளியேறுவதால் தமது கட்சிக்கு எவ்வித தாக்கமும் ஏற்படப்போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

தவறான முடிவை எடுத்து தனது அரசியல் வாழ்வுக்கு ஹரிசன் முடிவை தேடிக்கொண்டுள்ளதாக ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க போவதாக முன்னாள் அமைச்சர் பி.ஹரிசன் நேற்று அறிவிடுத்திருந்தமையும்  குறிப்பிடத்தக்கது.

அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியில் தான் வகித்த அனைத்து பதவிகளையும் துறப்பதாகவும் பி.ஹரிசன் அறிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் பலர் விரைவில் ஜனாதிபதியிடம் சரணடைவார்கள்.  நெருக்கடியான சூழ்நிலையிலேயே ஜனாதிபதி நாட்டை பொறுப்பேற்றார். அவர் மாற்றத்தை ஏற்படுத்தி காட்டியுள்ளார்.

ஆனால் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, விமர்சனங்களை மட்டுமே முன்வைப்பதாக பி.ஹரிசன் குற்றம் சுமத்தியிருந்தார்.

Leave a Reply