மொட்டு கட்சியை காப்பாற்றினால் ரணிலுக்கு கெட்ட பெயர் ஏற்படும்.! அதிகாரம் ஜனாதிபதியிடமா? மஹிந்தவிடமா! செல்வம் எம்.பி கேள்வி!samugammedia

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்ட பின்னரும் சில செயற்பாடுகள் இடம்பெறுகின்றது என்றால் உண்மையில் அதிகாரம் ஜனாதிபதியிடமா அல்லது மஹிந்தவிடமா உள்ளது என்ற சந்தேகம் எழுவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் இவ்வாறு சந்தேகம் வெளியிட்டிருந்தார்.

நாடு முழுவதும் இராணுவத்தினரின் கெடுபிடிகள் அதிகமாகி உள்ளது. எனவே ஜனாதிபதி இதற்கான பதிலை மக்களுக்கு சொல்லவேண்டும். முப்படைகளை களம் இறக்கி மக்களை அச்சுறுத்துவது தவறான செயற்பாடகவே நான் பார்க்கிறேன்.  

அண்மையில் ஜனாதிபதியுடன் எமது சந்திப்பு இடம்பெற்றது. சில விடயங்கள் தொடர்பாக அவர் உத்தரவிட்ட பின்னரும் அதனை மீறும் செயற்பாடுகள் இடம்பெற்றிருக்கின்றன.

வனவளத்திணைக்களம், தொல்லியல் திணைக்களம் ஆகியவற்றின் செயற்பாடு வன்னியிலும் பரவலடைந்துள்ளது.

எனவே அதிகாரம் ஜனாதிபதியிடம் இருக்கிறதா அல்லது மஹிந்த ராஜபக்சக்களின் கைகளில் இந்த திணைக்களங்கள் இருக்கின்றதா என்ற சந்தேகம் எங்களுக்கும் இருக்கின்றது.
மஹிந்த தான் அவர்களுக்கு கட்டளை இடுகின்றாரா என்ற கேள்வி எமக்கு இருக்கிறது.

எனவே ஜனாதிபதி இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும். மொட்டு கட்சியை காப்பாற்றும் செயற்பாட்டை அவர் மேற்கொண்டால் அவர் செய்யும் நற்செயல்களுக்கும் கெட்ட பெயரே ஏற்படும் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply