தமிழ் இனப்படுகொலை ஊர்திப் பவனிக்கு இராணுவம் இடையூறு..! samugammedia

தமிழ் இனப்படுகொலையின் நினைவாக முன்னெடுக்கப்பட்டுள்ள ஊர்திப் பவனிக்கு இராணுவத்தினரால் இடையூறு ஏற்படுத்தபட்டுள்ளது.

குறித்த ஊர்திப் யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பேருந்து நிலையத்திற்கு அண்மையில் பயணித்த போது இடையூறு ஏற்படுத்தபட்டிருந்தது.

முள்ளிவாய்க்கால் நினைவு சுமந்த ஊர்திப் பவனி, முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து கடந்த 12 ஆம் திகதி ஆரம்பமாகியிருந்தது.

முள்ளிவாய்க்கால் கடற்கரையில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்ட பின்னர், நினைவுப் பேரணி ஆரம்பமாகியிருந்தது.

இந்தப் பேரணி முல்லைத்தீவிலிருந்து வவுனியா, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களினூடாக மீண்டும் முள்ளிவாய்க்காலைச் சென்றடையவுள்ளது.

அந்த வகையில் முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலத்தை – நினைவூட்டும் வகையிலான ஊர்திப் பவனி இன்று கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணித்துள்ளது.

குறித்த ஊர்தி சாவகச்சேரி பேருந்து நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் பயணித்த போது இராணுவத்தினர் இடையூறு வழங்கியுள்ளனர்.

இராணுவ அதிகாரி ஊர்தி தொடர்பில் கேள்வி எழுப்பி அதிகாரி வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டமையினால் சில நேரம் குழப்ப நிலை ஏற்பட்டிருந்தது.

எனினும் குறித்த ஊர்தி தடைகளைத் தாண்டி யாழ்ப்பாணம் நோக்கி பயணித்து இன்றைய நாள் பயணத்தை நிறைவு செய்துள்ளது.

Leave a Reply