கோட்டாபய கொலை சதி: தமிழ் அரசியல் கைதி விடுதலை..! samugammedia

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டியதாக சந்தேகத்தில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் இன்று கொழும்பு மேல்நீதிமன்றால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

2006ஆம் ஆண்டு கொழும்பு – பித்தளை சந்தியில், அப்போதைய பாதுகாப்பு செயலாளரான கோட்டாபய ராஜபக்ஷவை இலக்கு வைத்து தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் கடந்த 15 ஆண்டுகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிவலிங்கம் ஆருரன் இன்றைய தினம் கொழும்பு மேல் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டார்.

Leave a Reply