ஜக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேசுக்கு அமைச்சுப் பதவி ஒன்று வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
தோட்ட வீட்டு வசதி தொடர்பான அமைச்சுப் பதவி ஒன்று விரைவில் வழங்கப்படவுள்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று இலங்கைக்கு வருகை தந்தியிருந்ததுடன் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன் பின்னர் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இந்நிகழ்வில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.