ஜெரோம் பெர்னாண்டோ கத்தோலிக்க திருச்சபையுடன் தொடர்புடைய நபரோ இல்லை! – சிறில் காமினி samugammedia

பௌத்த மதத்தை அழிக்கும் வகையில் ஜெரோம் பெர்னாண்டோ என்ற போதகர் தெரிவித்த கருத்து காரணமாக நாட்டின் மத நல்லிணக்கத்திற்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம் உள்ளதாக கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் சிறில் காமினி தெரிவித்துள்ளார்.

கொழும்பு பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே இவ்வாறு தெரிவித்திருந்தார். 

ஜெரோம் பெர்னாண்டோ கத்தோலிக்க வழிபாட்டுவாதியோ அல்லது கத்தோலிக்க திருச்சபையுடன் தொடர்புடைய நபரோ இல்லை என சிறில் காமினி தெரிவித்தார்.

இதேவேளை, ஜெரோம் பெர்னாண்டோவின் கருத்தை தாம் கண்டிப்பதாகவும், அதனை முற்றாக நிராகரிப்பதாகவும் கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் சிறில் காமினி மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, புத்தரை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக அனைத்துக் கட்சிப் போராட்டக்காரர்கள் சங்கம் இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளது.

இதேவேளை, சிலர் வன்முறையை பரப்ப முயற்சிப்பதாக அரசாங்கத்திற்கு தகவல் கிடைத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இந்த ஆயர் 

தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே பந்துல குணவர்தன இவ்வாறு தெரிவித்திருந்தார்

Leave a Reply