பைகளை நிரப்புவதற்காகவே கிறிஸ்தவ போதகர் ஏனைய மதங்களை இழிவுபடுத்துகின்றார்..!மேர்வின் சில்வா..!samugammedia

பௌத்த மதத்திற்கு எதிராக கருத்து வெளியிட்டு தற்போது நாட்டை விட்டு வெளியேறியுள்ள கிறிஸ்தவ போதகரின் கருத்துகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கருத்து வெளியிட்டுள்ளார்.

போதகர் தனது பைகளை நிரப்புவதற்காக மதவேறுபாடுகளை உருவாக்குவதாகவும் உலகில் பெரும்பான்மையான மக்கள் பின்பற்றும் மதமான கிறிஸ்தவ மதத்தை ஜெரோம் பெர்னாண்டோ அவமதிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கிறிஸ்தவ போதகருக்கு பௌத்தம் தெரியாவிட்டால் தாம் கற்றுத்தருவதாகவும் மோர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள கலாச்சாரம் மற்றும் பௌத்த தத்துவங்கள் தொடர்பாக கருத்துக்களை முன்வைப்பதில் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் மார்வின் சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக புத்தர் ஒளியைத் தேடவில்லை உண்மையைத் தேடியதாகவும் மோர்வின் சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏனைய மதங்களை அவமதிப்பது, இழிவுபடுத்துவதையும் நிறுத்துமாறு தெரிவித்த மோர்வின் சில்வா, இறுதியாக மீண்டும் இனவாதம் மற்றும் மதவாதம் தலைதூக்க ஆரம்பித்தால் அதனை உடனடியாக தடுத்து நிறுத்தும் திறன் தன்னிடம் உள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

Leave a Reply