தேங்காய் எண்ணை வியாபாரி மர்பநபர்களினால் சுட்டுக்கொலை..! samugammedia

சிறிய வியாபாரியான 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை, மர்ம நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

மஹாசென்புர பிரதேசத்தில் உள்ள வீட்டில் வைத்தே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேங்காய் எண்ணெய் வியாபாரம் செய்து வருகினற் இவர், இரவு வீட்டில் இருந்த போது இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த மூவர் ரி56 – ரக துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூடு தொடர்பில் 119க்கு கிடைத்த தகவலின் பிரகாரம் பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்றதுடன் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply