தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் மன்னாரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைப்பு..!samugammedia

தமிழரசு கட்சியின் மன்னார் மாவட்ட கிளையின் ஏற்பாட்டில்  முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு  இன்று (17) புதன்கிழமை 10 மணியளவில்  மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக  இடம் பெற்றது.

இதன்பொழுது பொதுமக்கள், வர்த்தகர்கள்,சாரதிகள் உட்பட அனைவருக்கும் முள்ளிவாய்கால் கஞ்சி வழங்கிவைக்கப்பட்டது .

குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மலநாதன்,  தமிழரசு கட்சியின் நகரசபை,பிரதேச சபை உறுப்பினர்கள்,  இளைஞர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்

அதே நேரம் மன்னார் தோட்டவெளி பகுதியிலும் முள்ளிவாய்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு தோட்டவெளி பகுதி மக்களால் ஒழுங்கமைக்கப்பட்டு இடம்பெற்றது.

அருட்தந்தைகள், பொது மக்கள் உட்பட பலரும் இணைந்து உணர்வு பூர்வமாக குறித்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Leave a Reply