விக்கியை சுட்டிக்காட்டி – நல்ல பிள்ளைக்கு நடிக்கும் சுமந்திரன் – சூடானார் – கஜேந்திரன்.! samugammedia

தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மக்கள் முன்பாக விக்கினேஸ்வரனுக்கு எதிராக கருத்தை தெரிவித்து ஒற்றையாட்சியை தாம் எதிர்ப்பது போன்ற மாயை காட்ட முயற்சிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செ.கஜேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

நாகர்கோவிலில் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டதன் நினைவாக நாகர்கோவில்  மகாவித்தியாலயம் முன்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே செ.கஜேந்திரன் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரன் 13வது திருத்தத்தை திருத்தி புதிய நடைமுறை ஒன்றை உருவாக்கி ரணிலிடம் ஒப்படைத்தாகவும் ஆனால் அதற்கு எம்.ஏ.சுமந்திரன் எதிர்ப்பை ஊடகங்கள் முன்பு வெயிட்டு தான் ஒற்றையாட்சியை எதிர்ப்பது போன்று நாடகமாடுவதாகவும் செ.கஜேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமது கட்சியை தவிர கடந்த 15ஆம் திகதி ரணிலுடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற அனைத்து கட்சி உறுப்பனர்களும் ஒற்றையாட்சிக்குள தீர்வு என்ற நிலைப்பாட்டில் உள்தாகவும் ஒன்றையாட்சிக்குள் உருவாகும் எந்த தீர்விற்கும் மக்கள் ஆணை வழங்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply