யாழ் பல்கலையில் அனுஷ்டிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் 14ம் ஆண்டு நினைவேந்தல்

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 14ம் ஆண்டு நினைவேந்தல் தமிழர் தாயகத்தில் நினவுகூரப்பட்டு வரும் நிலையில், யாழ்.பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது பொதுச்சுடரினை யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் ரகுராம் ஏற்றினார். இதனையடுத்து தொடர்சியாக ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டதோடு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது .

தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டது. இதன்போதுது யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள், கலைப்பீட பீடாதிபதி எஸ் ரகுராம், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

The post யாழ் பல்கலையில் அனுஷ்டிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் 14ம் ஆண்டு நினைவேந்தல் appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.

Leave a Reply