யாழில் பரிதாபம்..! கிணற்றில் விழுந்து இளம் யுவதி உயிரிழப்பு..!samugammedia

யாழ் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் – கல்விளான் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து யுவதி ஒருவரது சடலம் இன்று இரவு மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

சுழிபுரம் – கல்விளான் பகுதியைச் சேர்ந்த இராசதுரை நிரோஜா (வயது 24) என்ற பெண், அவரது வீட்டில் இருந்து 300 மீற்றர்கள் தொலைவில் உள்ள கிணறு ஒன்றில் விழுந்துள்ளார்.

இதனையடுத்து அப்பகுதியில் உள்ளவர்கள் அவரை கிணற்றில் இருந்து தூக்கி சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply