களுத்துறை சம்பவம்..!ஆசிரியர்கள், பெற்றோர்கள் போராட்டம்..! அதிபர் திடீரென கல்வி அமைச்சுக்கு இடமாற்றம்..??samugammedia

களுத்துறையில் அண்மையில் மாடியில் இருந்து மர்மமான முறையில் உயிரிழந்த பாடசாலை மாணவி கல்வி கற்ற பாடசாலையின் அதிபர்   திடீரென கல்வி அமைச்சுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இந்த இடமாற்றத்திற்கு எதிராக ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள்  மௌனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த மாணவி கல்வி கற்ற பாடசாலையின் அதிபர்  திடீரென கல்வி அமைச்சுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த இடமாற்றத்திற்கும் மாணவியின் மரணத்திற்கு தொடர்பு இருக்குமா என்றும் சந்தேகம் எழுப்படுகின்றது.

மாணவியின் மரணம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் தனது மகளுக்கு நீதி கிடைக்கவேண்டுமென மாணவியின் தாயார் வலியுறுத்துகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply