வழமைக்கு திரும்பியது காரைநகர் – ஊர்காவற்துறை போக்குவரத்து சேவை! samugammedia

ஊர்காவற்துறை – காரைநகர் இடையிலான கடல் பாதை போக்குவரத்து சேவையினை சில மணித்தியாலங்களில் வழமைக்கு திரும்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்ட யாழ் ஒருங்கிணைப்புக் குழவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு பிரதேச மக்களினால் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடல் பாதை  நேற்று(19.05.2023) சேவையில் ஈடுபட்டிருந்த வேளையில் ஏற்பட்ட உடைவு காரணமாக பயணிகள் அசௌகரியங்களை எதிர்கொண்டதுடன், போக்குவரத்தும் தடைப்பட்டது.

இவ்விடயம் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு பிரதேச மக்களினால் கொண்டுவரப்பட்டிருந்தது.

இந்நிலையில், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாதையை திருத்தஞ் செய்து மீண்டும் சேவையில் ஈடுபடுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கியதுடன், குறித்த அனர்த்தம் ஏற்பட்டமைக்கான காரணத்தினை ஆராய்ந்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அதிகாரிகளிடம் கோரியிருந்தார்.

இந்நிலையில், சில மணித்தியாலங்களிலேயே திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு போக்குவரத்து வழமைக்கு திரும்பியதாக பிரதேச மக்களினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.Leave a Reply