சந்தானத்துடன் இணைந்து நடிக்க இருக்கும் இலங்கை

இந்திய தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் சந்தானத்துடன் இலங்கைச் சேர்ந்த பெண் ஒருவர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொழும்பு நகரைச் சேர்ந்த சிங்களப் பெண்ணான சாசினி சதுரங்கி எனும் பெண்ணே சந்தானத்துடன் நடிக்கவுள்ளார்.

இவர் சமூக வலைத்தங்களில் வீடியோ, போட்டோசூட் போன்றவற்றை பதிவிட்டு மக்கள் மத்தியில் பிரபலமாகினார்.

அதுமட்டுமின்றி சிங்களப் பெண்ணாக இருந்த போதிலும் தமிழில் நல்ல கருத்துக்களை வீடியோவாக எடுத்து பதிவிட்டு தமிழ் மக்கள் மனதிலும் இடம்பிடித்தார்.

தற்போது அவருக்கு தமிழ் சினிமாவில் ‘என்ரி’ கொடுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதனை அவரே தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு மக்களுக்கு அறிவித்துள்ளார்.

அப் பதிவில் ‘இந்திய தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் சந்தானம் சேரின் புதிய படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பு எனக்கு கிடைத்த பொன்னான சாதனை’ என பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

The post சந்தானத்துடன் இணைந்து நடிக்க இருக்கும் இலங்கை appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.

Leave a Reply