எனக்கும் எனது பிள்ளைகளுக்கும் அனுமதி வேண்டும் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் விடுத்த கோரிக்கை! samugammedia

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து தம்மை நீக்கும் பிரேரணை மீதான விவாதத்தைக் காண்பதற்கு தனது இரு பிள்ளைகளுக்கும் மற்றும் தனக்கும் சந்தர்ப்பம் வழங்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து நீக்குவதற்காக விவாதம் எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் இடம்பெறவுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற பொதுச் செயலாளருக்கு கடிதம் ஒன்றின் மூலமே ஜனக ரத்நாயக்க இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை நீக்கும் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் 24ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply