தமிழர் நிலங்களை களவெடுத்தே தையிட்டி விகாரை கட்டப்பட்டது- ரஜமஹா விகாரையின் விகாராதிபதி அதிரடி..!samugammedia

தையிட்டி விகாரை தமிழர் நிலங்களை களவெடுத்து கட்டிய விகாரை என்று நயினாதீவு ரஜமஹா விகாரையின் விகாராதிபதி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

30 வருட போர் காலத்திலும் சிங்களவர்களிற்கு எவ்வித பிரச்சினையும் காணப்படவில்லை. தென் இலங்கை வாழ் மக்களுக்கு உண்மை தெரியாது எனவும் தெரிவித்துள்ளார்.

ஆரம்ப காலகட்டத்தில் இருந்தவர்கள் தனி தமிழீழ விடுதலைப் புலிகள் அல்லர் எனவும்  ஈ.பி.டி.பி, டெலோ,போன்ற அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றிணைந்தே காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.  

அவ்வாறு விடுதலைப் புலிகளுடன் வேறு சில அமைப்புக்கள் ஒன்றிணைந்து இருந்த  காலப்பகுதியில் பௌத்த விகாரைகள் உடைக்கப்பட்டன என கூறியுள்ளார்.

அதை நேரடியாக விடுதலைப் புலிகள் தான் செய்தார்கள்  எனக் கூற முடியாது எனவும்  அதனை யார் செய்தார்கள் என புரிந்தே கூறுதல் வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகள் நினைந்திருந்தால் அவர்களது தனியான 14 வருட காலப்பகுதியில் வெடியரசன் கோட்டை போன்றவற்றை இல்லாது செய்திருக்கலாம் ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

அது மட்டுமன்றி புத்தர் இந்து முறைப்படி வாழ்ந்தவர் என்பதால் அதனை  அனைவரும் சிங்கள பௌத்தம் என கூறுதல் தவறானது என்றும் தெரிவித்தார்.

பௌத்தம் வேறு எனவும் சிங்கள சாதி வேறு எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply