இலங்கையில் பலரின் கவனத்தையும் ஈர்த்த நாய் ! samugammedia

இலங்கையில் உபசம்பதா நிகழ்வை முன்னிட்டு தாய்லாந்து தேரர்களுடன் திருகோணமலையிலிருந்து கண்டி வரை 200 கி.மீ. மைல்கள் பாத யாத்திரையாக நடந்த சென்ற நாயொன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இலங்கையில் உபசம்பதா ஸ்தாபிக்கப்பட்டு 270 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு தாய்லாந்தில் இருந்து கடந்த 14 ஆம் திகதி வருகை தந்த பிக்குகள் உள்ளிட்ட குழுவினர் திருகோணமலையிலிருந்து கண்டி வரை பாத யாத்திரையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சமய நிகழ்ச்சி நேற்றுடன் ( 23.05.2023) நிறைவடைந்ததுடன், பயணத்தின் ஆரம்பம் முதல் இறுதி நிமிடம் வரை 200 கிலோ மீற்றருக்கும் அதிகமான தூரத்தை கடந்து தாய்லாந்து தேரர்கள் யாத்திரையாக சென்றுள்ளனர்.


இந்த பயண யாத்திரையின் போது 200 கிலோ மீற்றருக்கும் அதிகமான தூரத்தை கடந்து யாத்திரையாக சென்ற நாயொன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளதுடன், தாய்லாந்து பெண்களும் தனது பாசத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

Leave a Reply