திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பம்…!samugammedia

பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்று புதன்கிழமை (24) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இதன் போது உற்சவ மூர்த்திகளுக்கு வசந்த மண்டபத்தில் பூஜைகள் இடம் பெற்றது.

அதனை தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் உள் வீதி வலம் வந்து கொடித் தம்ப பூஜை  இடம் பெற்று அதனை தொடர்ந்து கொடி தம்பத்திற்கு அபிஷேகம் செய்து ஆராதனைகள் இடம்பெற்றது.பின்னர் சுப வேளையில் கொடியேற்றம் இடம் பெற்றது.

திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு கருணாநந்த குருக்கள் தலைமையில் கொடியேற்றம் இடம் பெற்றது.இதன் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply