இலங்கையின் குட்டி இங்கிலாந்து என அழைக்கப்படும் நுவரெலியா நகரில் நாளாந்தம் அதிக உள்ள நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதால் நுவரெலியாவில் உள்ள கிரேகரி வாவியினை சுத்தம் செய்யும் நடவடிக்கைகளை நுவரெலியா மாநகரசபையினர் முன்னெடுத்துள்ளனர்
கிரேகரி வாவியில் உள்ள பாசி செடிகள் படர்ந்து வாவி முழுவதும் படர்ந்து உள்ளதை அகற்றி கரைகளில் உள்ள புதர்களை சுத்தம் செய்து வாவி முழுவதும் மிதக்கும் பிளாஸ்டிக் குப்பைகளையும் கழிவு பொருட்களையும் அகற்றி சுத்தம் செய்து ஜே சி பி இயந்திரத்தினை பயன்படுத்தி அகழ்வு பணி மூலம் ஆழப்படுத்தியும் அகலப்படுத்தியும் வருகின்றனர் .
இதன்போது பெருமளவான.பிலாஸ்டிக் வெற்று போத்தல்கள் பொலித்தீன் கழிவுப்பொருட்கள் வாவியின் சுற்றி உள்ள பகுதிக்களில் இருந்து மீட்கப்பட்டது.
இது எதிர்காலத்தில் சுற்றுச்சூழலுக்கும், வாவிக்கும், ஆபத்தினை ஏற்படுத்தும் என மாநகரசபை விசேட ஆணையாளர் திருமதி சுஜீவ போதிமான கருத்து தெரிவித்தார்.
எதிர் வரும் காலங்களில் இவ்வாறு கழிவு பொருட்கள் விட்டு செல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உள்ளதாக ஆணையாளர் நாயகம் கூறினார்.