பிரிட்டனின் Downing Street வாயிலை கார் மோதியது – ஒருவர் கைது!

பிரித்தானிய பிரதமரின் அலுவலகம் அமைந்துள்ள டவுனிங் வீதி (Downing Street) வாயில் மீது கார் ஒன்று மோதியதனை அடுத்து அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தக் காரை செலுத்தியவர் உடனடியாக  கைது செய்யப்பட்டுள்ளார்.

பாரிய  சேதம் விளைவித்தல்,  மற்றும் ஆபத்தாக வாகனம் ஓட்டியமை குறித்த சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார், எனினும் இந்த சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடர்புடையதாக கருதப்படவில்லை என பெருநகர பொலிசார் (Met Police) தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும் இந்தக் கார் மோதியநேரத்தில் டவுனிங் வீதியில்  பிரதமர் ரிஷி சுனக் இருந்ததனை பிரமர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

பிரதமர் வதிவிடம் அமைந்துள்ள பகுதி ஊடாகச் செல்லும் பல அரசு அலுவலகங்களின் மையப்பகுதி  விளங்கும் பிரதான சாலையான ஒயிட்ஹாலில் (Whitehall) உள்ள பகுதி, மாலை 4.20 மணியளவில் அதிக மக்கள் நடமாட்டம் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த வேளையில் வீதியில் சென்ற ‘சில்வர் கியா’ (silver Kia ) ரகக் கார் ஒன்று அலுவலக வாயில் இரும்பு வேலி மீது மோதியது. கார் மோதிய சத்தத்தை  அடுத்து பகுதியளவான மக்கள் அந்தப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட முழுமையான சோகனையின் பின் அந்த வீதி  போக்குவரத்துக்கு திறக்கப்பட்டு, காவற்துறை சுற்றிவளைப்பு அகற்றப்பட்டது. இரவு 19:45 மணியளவில் கார் காவற்துறை மீட்பு வாகனத்தில் ஏற்றப்பட்டு சம்பவ இடத்திலிருந்து அகற்றப்பட்டது.

பொலிஸ் அதிகாரிகள் வாகனத்தை சோதனை செய்த போது காண்பட்ட கையடக்க தொலைபேசியை மீட்டதுடன் தடயவியல் அதிகாரிகள் காரை சோதைனையிட்டனர். மோப்ப நாய்களும் சோதனையில் ஈடுபடுத்த்பட்டதாக தெரிவிக்க்படுகிறது.

 

Leave a Reply