யாழ் வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட உடுவில் நாகம்மாள் வீதி புனரமைப்பு பணிகள் இன்று ஆரம்பமாகியுள்ளது.
வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் நிதிப்பங்களிப்புடன் இவ்வீதி புனரமைக்கப்பணிகள் நடைபெறவுள்ளன
உடுவில் நாகம்பாள் ஆலயத்தில் நடைபெற்ற. பூசை வழிபாடுகளின் புனரமைப்பு பணிகள் இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது
கடந்த அரசாங்கத்தின் நாடாளாவியவீதியில் ஒரு லட்சம் கிலோமீட்டர் வீதிகளை புனரமைக்கும் திட்டத்தின் கீழ் அடிக்கல் நாட்டப்பட்டு நாட்டின் பொருளாதார இஸ்திர தன்மை காரணமாக வேலைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
இந் நிலையில் வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் 79 இலட்சம் ரூபா நிதியில் புனரமைக்கும் பணிகள் இன்று ஆரம்பமாகியுள்ளன
மிக நீண்ட காலமாக புனரமைக்கப்படாத வீதியானது இன்று புனரமைக்கப்பட்டு வருவதாகவும் இவ் வீதி மழை காலங்களில் பயணிக்க முடியாத நிலையில் காணப்படுவதாகும் கிராமத்தில் வாழும் மக்கள் தமது அன்றாட செயல்பாடுகளை மழை காலங்களில் மேற்கொள்ள முடியாத நிலை காணப்பட்டதாகவும் கூறப்படுகின்றது புனரமைப்பு பணிகள் ஆரம்பித்தவை தமக்கு பெரும் மகிழ்வாக இருப்பதாக கிராம மக்கள் கருத்து தெரிவித்தனர்.
இந் இவ்வீதி அமைந்துளள. வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் முன்னாள் 11 வட்டார உறுப்பினர் தவராசா துவாரகன் இக்கிராம சமூக மட்ட அமைப்புக்களின் பிரதி நிதிகள் கிராம மக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.