
இலங்கையில் அமைந்துள்ள பலஸ்தீன தூதரகம் மற்றும் இலங்கை அரபுலக இராஜதந்திரிகள்கவுன்ஸில் என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்த ‘நக்பா’ பேரிடர் தினத்தின் 75 ஆவது ஞாபகார்த்த நிகழ்வு கடந்த திங்கட்கிழமை(22) கொழும்பு 07 இல் அமைந்துள்ள சர்வதேச உறவுகள்மற்றும் மூலோபாய கற்கைகளுக்கான லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவன கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.