யாழ் வலிகாமம் பாடசாலையொன்றில் மாணவர்களை மூர்க்கத்தனமாக தாக்கிய ஆசிரியர்..! samugammedia

வலிகாம வலயத்திற்கு  உட்பட்ட  பிரபல  பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரால் இன்று(26)  அதே பாடசாலையைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் இருவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில்  மேலும் தெரியவருவதாவது,

குறித்த ஆசிரியர் மூன்று மாணவர்களை அழைத்து அவர்களின் தலை முடி தொடர்பில் வினாவிய பின் அவர்களை கையால் தாறுமாறாக தாக்கியுள்ளார்.

ஆசிரியரின் தாக்குதலுக்குள்ளான ஒரு மாணவனின் மூக்கால் இரத்தம் வடிந்த நிலையிலும் மற்றைய மாணவன் மயக்கமுற்ற நிலையிலும் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

குறித்த விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவன் ஒருவனின் தந்தையார் கருத்து தெரிவிக்கையில்,

தனது மகனை என்ன காரணத்துக்காக குறித்த ஆசிரியர் அடித்தார் என தெரியாது எனக் கூறியதுடன் திடீரென கைகளால் முகம் தலைப் பகுதிகளை தாக்கியதாக தெரிவித்தார்.

அது மட்டுமல்ல குறித்த ஆசிரியர் மன நோயால் பாதிக்கப்பட்டவர் என தான் அறிந்ததாகவும் இவ்வாறான ஆசிரியரை பாடசாலையில் வைத்திருப்பது ஏனைய மாணவர்களுக்கும் அச்சுறுத்தலாக அமையும் .

ஆகவே,  மனநோய் உள்ள ஆசிரியர் ஒருவரை  பாடசாலையில் வைத்திருப்பது தொடர்பில் உரியவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.

Leave a Reply