இலங்கையில் தண்ணீருக்கு தட்டுப்பாடா.?? மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள செய்தி என்ன..??samugammedia

இலங்கையில் குறிப்பாக தென்னிலங்கையில் நீர்த்தேவை அதிகரித்துள்ளமையினால் நுகர்வோர் தண்ணீரை கவனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கோரியுள்ளது.

அதிக வெப்பம் காரணமாக மக்களின் அன்றாட நீர்த்தேவை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

இதனால் நீர் விநியோகத்தின் போது அழுத்தங்கள் ஏற்படலாம் என்றும் அல்லது நீர் விநியோகம் தடைப்படலாம் என்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிடுகின்றது.
எனவே நீரை சேகரித்து பயன்படுத்துமாறு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மக்களிடம் வினையமாக வேண்டுகோள் விடுத்துள்ளது.

Leave a Reply