மனவளர்ச்சி குன்றிய யுவதியை பாலியல் ரீதியில் துஸ்பிரயோகம் செய்த இரண்டு சந்தேக நபர்களை தேடிவருவதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு சந்தேக நபர்களும் சட்டவிரோதமான மதுபான வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்திருந்த பொலிசார், சந்தேக நபர்களை ‘கசிப்பு குமார’ மற்றும் ‘சாலயா’ என்ற புனைபெயர்களால் அழைக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மனவளர்ச்சி குன்றிய யுவதி வசிக்கின்ற இடத்திற்கு அருகாமையில் இருந்தே இரண்டு சந்தேக நபர்களும் சட்டவிரோத மது கடத்தலில் ஈடுபட்டிருந்தாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தின் பின்னர் இந்த இரண்டு சந்தேக நபர்களும் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இரண்டு வயது சிறுமியொருவர் தாத்தாவினால் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர், சிறுமிக்கு சிறுநீரில் கிருமி தொற்று ஏற்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிறுமி துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
வைத்தியர்கள் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, விசாரணைகளின் போது சந்தேக நபர் சிறுமியொருவர் தாத்தா என தெரியவந்துள்ளது
எனினும் சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.