மத முரண்பாடுகளால் தேசிய பாதுகாப்பு கேள்விக்குறி – அரசு கடுமையாக செயற்படும் – விடுக்கப்பட்ட எச்சரிக்கை.! samugammedia

நாட்டில் மதங்களுக்கு இடையில் முரண்பாடுகளை தோற்றுவித்து நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுமாயின் அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இனவாதம் மற்றும் மதவெறியைப் பரப்புவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டார் என்றும் வஜிர அபேவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பில் வஜிர அபேவர்தன இவ்வாறு சுட்எக்காட்டியிருந்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டைக் கைப்பற்றியதன் முதன்மையான நோக்கம் வீழ்ந்த நாட்டைக் கட்டியெழுப்புவதே கடந்த காலங்களில் சிலர் எடுத்த தனிப்பட்ட தீர்மானங்களுக்கு முன்னுரிமை வழங்கியதன் காரணமாக இலங்கை மீது ஜப்பானுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

எனவே அதனை போக்குவதற்காகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஜப்பான் விஜயம் முக்கியத்துவம் பெற்றிருந்தது.

இலங்கை சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், நீண்ட காலமாக தேசியத் திட்டத்தைச் செயல்படுத்த எந்த நாட்டுத் தலைவருக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் வஜிர அபேவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply