மூதூரில் டெங்கு தொற்றாளர்களை கட்டுப்படுத்துவதற்கான விசேட கட்டுப்பாட்டு செயற்பாடு! samugammedia

மூதூர் கிழக்கு கிராம சேவகர் பிரிவிற்குற்பட்ட பகுதிகளில், அதிகரித்துவரும் டெங்கு தொற்றாளர்களை கட்டுப்படுத்துவதற்கான விசேட டெங்கு கட்டுப்பாட்டு செயற்பாடு-தனியார் வீடுகள், அரச திணைக்களங்கள், பாடசாலைகள், பொது இடங்கள், கடற்கரையோரங்களில் இன்று(04)  முன்னெடுக்கப்பட்டது.மூதூர் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த நிகழ்வானது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா தலைமையில் இடம் பெற்றது. வீடு வீடாக சென்று டெங்கு பரவும் இடங்கள் பரிசீலிக்கப்பட்டு மக்களுக்கு விழிப்பூட்டப்பட்டது.

குறித்த நிகழ்வில் மூதூர் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் அரூஸ், மூதூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மூதூர் பிரதேச சபை உத்தியோகத்தர்கள், கிராம சேவக உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மூதூர் பொலிஸ் உத்தியோகத்தர்கள், C S D பாதுகாப்பு பிரிவினர்,(ASDO)அபுரார் சமூக அபிவிருத்தி மையத்தின் உறுப்பினர்கள், சனசமூக நிலைய பிரதிநிதிகள், சமுர்த்தி பயனாளிகள், பிரதேசவாசிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Leave a Reply