தலைமன்னாரிலிருந்து மாத்தளை வரை நடைபயணமாக சென்று மலையக மக்கள் குடியேறிய 200 ஆண்டு நிறைவை முன்னிட்டு ஆரம்பமாகவுள்ள நடைபயணத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (28) மாலை 5 மணியளவில் தலைமன்னாரில் ஆரம்பமானது.
மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகள் ஆகின்றது. அவர்கள் தலைமன்னாரிலிருந்து மாத்தளை வரை நடை பயணமாகவே வந்து இந்த மலையகப் பகுதியில் குடியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது.




இதை அடிப்படையாக வைத்து நாளை சனிக்கிழமை 29ம் திகதியிலிருந்து (29.07.2023) ஆகஸ்ட் மாதம் 12ந் திகதி வரை தலைமன்னாரிலிருந்து மாத்தளை வரையிலான ஒரு நடைப்பயணத்தை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் ஆரம்ப நிகழ்வுகள் ஆரம்பமானது.
தலைமன்னார் கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்ட மலையக மக்கள் இலங்கையில் கால் பதித்து 200 ஆண்டுகள் நிறைவின் நினைவுத்தூபி வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
-அதனை தொடர்ந்து அங்கிருந்து ஊர்வலமாக தலைமன்னார் புனித லோறன்சியா ஆலயத்தை சென்றடைந்தனர்.அங்கு ஆரம்ப நிகழ்வுகள் ஆரம்பமானது.
நாளை சனிக்கிழமை (29) காலை தலைமன்னார் புனித லோரன்ஸ் ஆலயத்தில் இருந்து பாதயாத்திரை ஆரம்பமாகும்.
நாளைய தினம் சனிக்கிழமை தலைமன்னாரிலிருந்து பேசாலைக்கு 18 கிலோ மீற்றர் தூரம் நடைப்பயணமாக புறப்பட்டு பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தில் தங்குவர்.30ந் திகதி பேசாலையில் இருந்து மன்னார் நகருக்கு 16 கிலோ மீற்றர் தூரம் சென்று மெதடிஸ்த ஆலயத்தில் தங்குவர்
8ந் திகதி திறப்ணையிலிருந்து 22 கிலோ மீற்றர் தூரமுள்ள கெக்கிராவ வுக்குச் சென்று பெப்ரிஸ் ஆலயத்தில் தங்குவர்.













