இலங்கையில் தொடரும் சோகம் – 8 மாதங்களில் 1613 பேர் விபத்தில் பலி! samugammedia

இலங்கையில் இந்த வருடத்தின் முதல் எட்டுமாத காலப்பகுதிக்குள் இடம்பெற்ற 1427 விபத்துக்கள் மூலம் 1613 பேர் உயிரிழந்திருப்பதாக பொலிஸ் போக்குவரத்து நிர்வாக பணிப்பாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார்.

இவற்றில் 632 மோட்டார் சைக்கிள் விபத்துக்களாகும். கடந்த வருடத்தில் இரண்டாயிரத்து 418 விபத்துக்கள் மூலம் 2538 பேர் உயிரிழந்திருப்பதாக நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

கடந்த வருடம் 1009 மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. அத்தோடு 171 பாடசாலை மாணவர்கள் விபத்துக்குள்ளாகி உள்ளனர்.

இவர்களில் நான்கு பேர் உயிரிழந்தனர். 28 பிள்ளைகள் படுகாயம் அடைந்தனர். 15 பேர் நீண்டகால உபாதைக்கு உள்ளானதாக பிரதி பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டினார்.

கடந்த வருடத்தில் பாதுகாப்பான தலைக்கவசம் அணியாமல் பயணம் செய்த ஒரு இலட்சத்து 86 ஆயிரத்து 684 பேர் சட்டத்தின் பிடியில் சிக்கியதாக அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *