உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கிலிருந்து முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணாண்டோ ஆகியோர் நிரபராதி என விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றையதினம் (18) மூவர் அடங்கிய கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குறித்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்கூட்டியே தகவல் அறிந்த போதிலும், அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட 855 குற்றச்சாட்டுகளிலிருந்தும் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் நிரபராதி என விடுதலை செய்ய, மூவர் அடங்கிய கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேற்றைய தினம் (18) முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெனாண்டோவும் குறித்த குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலை செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.






