தென் மாகாணத்தில் நாளை மின்வெட்டு – ஏனைய பகுதிகளுக்கு மின்வெட்டு இல்லை!

<!–

தென் மாகாணத்தில் நாளை மின்வெட்டு – ஏனைய பகுதிகளுக்கு மின்வெட்டு இல்லை! – Athavan News

தென் மாகாணத்தில் மாத்திரம் நாளைய தினம்(திங்கட்கிழமை) மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய நாளைய தினம் ஒரு மணித்தியாலம் அல்லது ஒன்றரை மணித்தியாலம் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.

போதியளவு எண்ணெய் கையிருப்பு மற்றும் நிதி உள்ள காரணத்தினால் நாளை ஏனைய பிரதேசங்களில் மின்வெட்டு தேவைப்படாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


Leave a Reply